அரசியல் கட்சி பதவிகள் தற்காலிகமானவை?

siladass-கி. சீலதாஸ், ஆகஸ்ட் 27, 2015 வாழ்க்கையில் பெறப்பட்ட அனைத்தும், நமது வாழ்க்கை உட்பட, தற்காலிகமானவை என்பதைப் புரிந்து கொள்ளாமல், கட்சி பதவிகள் தற்காலிகமானவை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இயற்கையும் கூட தற்காலிகமானதுதான்: காலை மதியமாக மாறுகிறது; மதியம் மாலைப்பொழுதாகி அதுவும் இரவாகிறது. இரவும் விடியலுக்கு வழிவிடுகிறது.