புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு: கவலையில் பிரித்தானிய அரசு

uk_migration_001பிரித்தானிய நாட்டிற்கு புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டு மார்ச் மாதம் வரை வெளிநாடுகளிலிருந்து புகலிடம் கோரி வந்துள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது பிரித்தானிய நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம் என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில், வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறந்து தற்போது பிரித்தானியாவில் குடியேறியுள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஆகும்.

புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள குடிவரவு அமைச்சரான ஜேம்ஸ் புரோகின்ஷிர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு குடியேற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இதற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் வரை 53 ஆயிரம் அதிகரித்து 1 லட்சத்து 83 ஆயிரம் ஆக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பி நாடுகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் வரை 39 ஆயிரம் அதிகரித்து 1 ஒரு லட்சத்து 96 ஆயிரமாக இருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூன், அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை தீவிர நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

ஆனால், அரசு நிர்ணயம் செய்திருந்த எண்ணிக்கையை விட கூடுதலான நபர்கள் அதிகரித்துள்ளதால், இது உள்நாட்டு தொழில்களை மிகவும் பாதிக்கும் என பிரித்தானிய தொழிலதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிகரித்துவரும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் உதவியும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என குடிவரவு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-http://world.lankasri.com