பெர்சே பங்கேற்பாளர்கள் நாட்டுப்பற்றவர்கள்: பிரதமர் சாடல்

najசட்டவிரோத  பெர்சே  பேரணியின்  ஏற்பாட்டாளர்களையும்  பங்கேற்பாளர்களையும் நாட்டுப்  பற்றில்  குறைந்தவர்கள்  என  நஜிப்  அப்துல் ரசாக் வருணித்தார்.

அரசியல்  கோட்பாடுகள் மாறுபடலாம்  ஆனால், தேசிய  நாள்  என்கிறபோது  காலனித்துவப்  பிடியிலிருந்து  தாய்நாட்டை  விடுவித்த  விடுதலைப்  போராட்ட  வீரர்களை  நினைவுகூறும்  வகையில் ஜாலோர்  கெமிலாங்கைப்  பறக்கவிட்டு  கொண்டாட வேண்டும்  என்று  பிரதமர்  கூறியதாக  பெர்னாமா  அறிவித்தது.

“நாம்  சுதந்திரத்தைக்  கொண்டாட  விரும்புகிறோம். ஆனால்,  சிலர்  வரலாற்றுச்  சிறப்புமிக்க  மெர்டேகா  சதுக்கத்தில்  அவர்களின்  உணர்வுகளை  வெளிப்படுத்த நினைக்கிறார்கள்.

“அவர்கள்  என்ன  புரியாதவர்களா? தாய்நாடு  மீதான  அவர்களின்  பற்றும்  பாசமும்  அவ்வளவு  குறைந்து  போய்விட்டதா?  விடுதலை  வீரர்கள்  இரத்தமும்  வியர்வையும்  சிந்தி உருவாக்கிய  நாடு  இது  என்பது  அவர்களுக்குத்  தெரியாதா?”. ஜெராண்டுட்  மாவட்ட  மன்ற  மண்டபத்தில்  ஜெராண்டுட்  அம்னோ  பேராளர்  கூட்டத்தைத்  தொடக்கிவைத்தபோது  நஜிப்  இவ்வாறு  கூறினார்.