அம்பிகா: அதிகாரமும், பணமும் இல்லாமல் ஒரு பேரணியைக் கூட்டுங்கள் பார்க்கலாம்

 

bersih4-15பெர்சே 4 ஏற்பாடு செய்திருந்த பேரணியில் வெறும் 20,000 பேர் மட்டுமே பங்கேற்றனர். அரசாங்கம் விரும்பியிருந்தால் அதைவிட பெரும் திரளான மக்களை கூட்ட முடியும் என்று பிரதமர் கூறியிருந்தது பற்றி கருத்துரைத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கும் பெர்சேயின் கூட்டத்திற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கினார்.

“நிச்சயம். எவ்வளவு பேரை வேண்டுமானாலும் திரட்டுவதற்கு அவர்களிடத்தில் பணமும் அதிர்காரமும் இருக்கிறது.

“பணமும், அதிகாரமும் இல்லாமல் மக்களின் நல்லெண்ணத்தின் மீது மட்டும் முழுமையான நம்பிக்கை வைத்து செய்வதுதான் உண்மையான சோதனை. அதில்தான் பெர்சேயின் வலிமை இருக்கிறது.

“மக்கள் தங்களுடைய சொந்த செலவில் தாமாகவே முன்வந்து இப்பேரணியில் பங்கேற்றதன் மூலம் நாட்டிற்கு தியாகம் செய்துள்ளனர்”, என்று அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.