ஜாம்: நஜிப் டிஏபி-யைவிட ஆபத்தானவர் என மகாதிர் நினைக்கிறார்

zamதெரு  ஆர்ப்பாட்டங்களை  எப்போதும்  எதிர்த்து  வந்துள்ள  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  பெர்சே 4  பேரணிக்கு  இரண்டு முறை  சென்று  வந்தது  பெரும்  புதிராக  இருந்தது. அப்புதிருக்கு   விடை  கண்டுபிடித்துள்ளார்  முன்னாள் தகவல்  அமைச்சர்  ஜைனுடின்  மைடின்.

“துன்  பெர்சே  சீனா  பேரணிக்குச்  சென்றது  ஏன்? ஏனென்றால், டிஏபி-யைவிட  (பிரதமர்) நஜிப்பை  ஆபத்தானவராக  கருதுகிறார்  துன்.

“மலாய்க்காரர்களின்  நினைப்பும்  அப்படித்தானே  உள்ளது, இல்லையா?”, என்று  ஜைனுடின் டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

“எப்படியும்  நஜிப்  போக  வேண்டும்  என்பதுதான்  துன்னின்  நோக்கம்  என்பது  தெள்ளத்  தெளிவாகத்  தெரிகிறது. அதனால்தான்  அவர்  பெர்சே  பேரணிக்குச் சென்றார். அவர்  அம்னோவை  விரும்புகிறார்  அதனால்தான்  நஜிப்  போக  வேண்டும்  என்று  நினைக்கிறார்”, என்றும்  அவர்  கூறினார்.

மகாதிர்  நேற்று  அவரின்  துணைவியார்  டாக்டர்  சித்தி  ஹஸ்மா  அலியுடன்  கேடிஎம்   கம்முட்டர்  ரயிலில்  செண்ட்ரல்  மார்க்கெட்  சென்று  அங்கு  செய்தியாளர்களிடம்  பேசினார்.

முன்னாள்  பிரதமர்  பெர்சேயை  ஆதரிக்கவில்லை.  ஆனால்  மக்களை  ஆதரிப்பதாகத்  தெரிவித்தார்.

பெர்சேயின்  கோரிக்கைகள்  என்னவாக  வேண்டுமானாலும்  இருக்கட்டும்.  அவருக்குக்  கவலை  இல்லை. நஜிப்  வெளியேற  வேண்டும். அதுதான்  அவருடைய  குறிக்கோள்.