பிஎன் எம்பி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பால் நஜிப்பை அசைக்க முடியாது

rahநாடாளுமன்றத்தில்  பிரதமர்  நஜிப்புக்கு எதிராக  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவந்து  வெற்றிபெற  முடியாது  என்கிறார்  பிஎன்  கோட்டா  பெலுட்  எம்பி  அப்துல்  ரஹ்மான்   டஹ்லான்.

வார  இறுதி  பெர்சே  பேரணியில்  நஜிப்புக்கு  எதிராக  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  நடத்தப்பட  வேண்டும்  என்று முழக்கமிடப்பட்டது  பற்றிக்  கருத்துரைத்த பிஎன்  வியூக  தொடர்பு  இயக்குனர்  இவ்வாறு  தெரிவித்தார்.

“நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  நடத்த வேண்டுமா,  நாடாளுமன்றத்தில்  நடத்திப்  பாருங்கள்.

“நாங்கள் எதிர்த்துப்  போராடுவோம்,  வெற்றி  பெறுவோம். நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பில்  வெற்றி  பெறும்  நம்பிக்கை  எங்களுக்கு  உண்டு”, என  செர்டாங்கில்  செய்தியாளர்களிடம்  அப்துல்  ரஹ்மான்  கூறினார்..