பெர்காசா: ஹாடியின் படத்தைக் காலில் போட்டு மிதித்தது ‘இனவெறிச் செயல்’

ibrபெர்சே  பேரணியில்  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கின்  நிழற்படத்தைக் காலில்  போட்டு  மிதித்தது ஒரு  இனவாதச்  செயல்  என  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார்.

“மரியாதை  தெரியாத  சீன  இளைஞர்கள் ஹாடியின் புகைப்படத்தைக்  காலில்  போட்டு  மிதித்ததையும்  அவரை  இழித்தும்  பழித்தும்  பலவகையாக  எழுதி  வைத்ததையும் பெர்காசா கண்டிக்கிறது”, என்றாரவர்.

அது வெறுக்கத்தக்க  செயல், மன்னிக்க  முடியாத  செயல்  என்றவர்  சாடினார்.  ஒன்றுகூடவும்  கண்டனம்  தெரிவிக்கவும்  மக்களுக்கு  உரிமை  உண்டு  என்று  குறிப்பிட்ட  இப்ராகிம்  இப்படிப்பட்ட  இழிச்செயல்களால்  அதைக்  கெடுத்துகொள்ளக்  கூடாது  என்றார்.