அனினாவை அம்னோ உச்சமன்றம் மட்டுமே நீக்க முடியும்

Aninasacking1அனினா, லங்காவி, கம்போங் பாடங் மாட்ஸிராட் அம்னோ கிளை உறுப்பினர், பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட அரசியல் நன்கொடை என்று கூறப்படும் ரிம2.6 பில்லியன் குறித்து பிரதமர் நஜிப்பை கடுமையாகச் சாடியிருந்தார்.

அதன் பின்னர், அனினா பிரதமர் நஜிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சூர் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் மெகாட் நஜிமுடின் மெகாட் காஸ், சம்பந்தப்பட்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஒரு முன்மொழிதலின் வழியாக மட்டுமே அனினாவை நீக்க முடியும் என்று இன்று கூறினார்.

Aninasacking2அம்னோ நிருவாகம் உச்சமன்றத்திற்கு தெரியாமலும், அதன் முன்மொழிதல் இல்லாமலும் அனினா நீக்கப்பட்டு விட்டார் என்ற அறிவிப்பை வெளியிட முடியாது என்று மெகாட் நஜிமுடினை மேற்கோள்காடி அஸ்ட்ரோ அவானி கூறியது.

ஆனல், கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் அனினா நீக்கப்பட்டதாக அறிவிப்பதற்கு முன்னதாக அம்னோ உச்சமன்றம் இவ்விவகாரம் குறித்து கூடி முடிவெடுத்ததா என்பது தமக்குத் தெரியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.