வான் அசிஸா: நஜிப்பை அகற்ற பாஸ்சுடனும் அந்த “மனிதருடனும்” சேர்ந்து உழைப்போம்

 

aZiztoworkwithhim1பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற எதிரணி எவருடனும் இணந்து உழைக்க விரும்புகிறது என்று டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார்.

“எவருடனும்” என்பது டாக்டர் மகாதிர் முகமட்டையும் உள்ளடக்கியதா என்று வான் அசிஸாவிடம் கேட்டதற்கு அவர், “தயவு செய்து, நீங்கள் சொல்ல விரும்புவதை என்னை சொல்ல வைக்காதீர்”, என்றார்.

தற்போது மகாதிர் பிரதமர் நஜிப் பதவி துறக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மகாதிர் வலியுறுத்தி வருகிறார்.