பிரான்ஸ்: ரீயூனியனில் காணப்பட்டவை எம்எச்370சின் சிதைந்த பாகங்கள்தான்

mh370debrisஇந்திய பெருங்கடலிலுள்ள ரீயுனியன் தீவில் கரைசேர்ந்திருந்த ஒரு விமானத்தின் சிதைந்த பகுதி சேதமடைந்த மலேசிய ஏர்லைன்ஸ்சின் ஒரு பாகம்தான் என்று விதிமுறைகள்படி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று நேற்று பாரிஸில் குற்றவியல் அரசு வழக்குரைஞர் கூறினார்.

ரியூனியன் தீவில் ஜூலை 29, 2015 காணப்பட்ட அந்த விமானத்தின் சிதைந்த பாகம் எம்எச்370 பயண விமானத்தின் ஃபலேப்பரோன் என்ற பாகத்துடன் ஒத்திருக்கிறது என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்துவது சாத்தியம் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த எம்எச்370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுடன் சென்று கொண்டிருக்கையில் காணாமல் போய் விட்டது.