கையாலாகாத பதவியும் கவுண்டு போன தமிழ் தேசிய கூட்டமைப்பும்

இலங்கையில் உள்ள இரண்டு பெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை , நிறுவியுள்ள நிலையில். எதிர்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பையும். எதிர்கட்சி தலைவராக சம்பந்தரையும் ஏற்றுக்கொண்டுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய. இதனை முன் மொழிந்தவர் ரணில். இன் நிலையில் உனடியாக சர்வதேச ஊடகங்களை தொடர்புகொண்ட இலங்கை ஊடக நிறுவனங்கள் குறித்த செய்தியை வெகுவாகப் பரப்பி வருகிறது. அல்ஜசீரா முதல் சி.என்,என் வரை தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவராக வந்துவிட்டார் என்ற செய்தி தான் அடிபடுகிறது. ஏதோ இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைத்துவிட்டது போல பொய்யான பிரச்சாரங்களை தற்போது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். இதுபோக இலங்கைக்கும் இலங்கை அரசியல் சாசனத்திற்கும் எதிராக நான் செயல்பட மாட்டேன் என்று வேறு சம்பந்தர் உறுதி மொழி எடுத்து விட்டார்.

இனி இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தேவை என்று சம்பந்தர் எவ்வாறு வாயை திறந்து பேச முடியும் ? இல்லை மூச்சு கூட விட முடியும் ? கேவலம் ஒரு கையாலாகாத பதவி ஒன்றைக் கொடுத்து ஒட்டு மொத்த கட்சியையும் வாய் அடைக்க வைத்து விட்டது சிங்களம். இதில் உள்ள சிலர் சர்வதேச விசாரணை தேவை என்று முரண்பட்டார்கள். அவர்களுக்கும் சில பதவிகளைக் கொடுத்து சம்பந்தர் வாயை அடைத்துவிட்டார். 225 ஆசனங்களைக் கொண்ட இலங்கைப் பாராளுமன்றில் , வெறும் 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய செய்ய முடியும் ? ஒரு பிரேரணையை எதிர்க்க முடியுமா ? இல்லை ஒரு சட்ட வரைபை மாற்ற முடியுமா ? நாற்காலியில் இருந்து வெறும் வெட்டிப் பேச்சு தான் பேச முடியும். இவர்கள்(அதாவது 16) பேரும் எழுந்து வெளிநடப்பு செய்தால் கூட ஏதோ உணவு விடுத்திக்கு சிலர் எழுந்து சென்று போண்டா சாப்பிடுவது போல தான் இந்த பாராளுமன்றில் இருக்கும்.

இது தான் இன்றைய யதார்த்தம். இதுவரை காலமும் இலங்கையில் கொல்லப்பட்ட லட்சோப லட்ச மக்களின் கதி ? முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் கதி ? அங்கங்களை இழந்து கணவனை இழந்து வாழும் மக்களின் கதி ? இவை அனைத்திற்கும் முன்னால் பதவி என்ற மோகம் இவர்கள் கண்களை மறைத்துவிட்டது. இறப்பதற்கு முன்னர் , ஒரு தடவை என்றாலும் எதிர்கட்சி பதவியை எடுத்துவிட வேண்டும் என்று 30 வருடங்களான கனவு கண்டவர் சம்பந்தர். கை கூடி வரும்போது இல்லை என்றா சொல்லிவிடுவார். இனி இலங்கை ரசின் இறைமைக்கு(அதாவது சிங்கள இறைமைக்கு) எதிராக இவரால் செயல்பட முடியாது. அதனையே அவர் சத்தியப் பிரமானமாக எடுத்துவிட்டார். அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை இலங்கைக்கு எதிராக இறுக்கமான தீர்மானத்தைக் கொண்டுவர வில்லை என்றால்.

புலம் பெயர் தமிழர்கள் மாற்று வழி ஒன்றை நிச்சயம் கண்டு பிடிப்பார்கள். குறித்த அந்த பொறிமுறை என்ன என்பது தொடர்பாக சர்வதேசத்தில் உள்ள நிபுனத்துவம் வாய்ந்த சட்டத்தரனிகள் சிலர் , புலம் பெயர் புத்தி ஜீவிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இலங்கை சர்வதேச நீதிமன்றில் அங்கம் வகிக்கவில்லை.எனவே அதனூடாக இலங்கையை தண்டிக்க முடியாது. மாற்று வழிகள் என்ன உள்ளது என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது. வெகு விரைவில் , இது தொடர்பான அறிக்கைகள் அதிர்வு இணையம் ஊடாக வெளியாகும்.

-http://www.athirvu.com

ஒருபோதும் நாட்டைப் பிரிக்க மாட்டேன்! நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள்! சம்பந்தன் சிங்களத்தில் பேட்டி

இன்று பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு, கிழக்கில் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீளவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றின்ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருப்பெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனத்தின் பின்னர் சிங்கள சந்தேஷிய சேவைக்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் போன்றே தான் செயற்படவிருப்பதாகவும் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன எனக் கேட்டதற்குப் பதிலளித்துள்ள அவர்:

“சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்வேன்.

“ஒருபோதும் நாட்டைப் பிரிக்க மாட்டேன். நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையே தேவையில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையை முற்றுமுழுதாக விட்டுவிடலாம்,” என்று ஐயம் திரிபறத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அரசிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன எனக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்துள்ள திரு சம்பந்தன்:

“இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும். எல்லோரும் ஒன்றாக இருக்ககூடிய தீர்வு எத்தகைய தீர்வாவது கொண்டுவரப்பட வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

-http://www.pathivu.com

TAGS: