ரபீடா: போலீஸ் பேரணியில் பங்கேற்றவர்களை விசாரித்து நேரத்தை வீணாக்கக்கூடாது

 

Rafidaazizபெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டவர்களை கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிப்பதை அதிகாரத்தினர் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரபீடா அசிஸ் கூறினார்.

அதற்கு மாறாக, மக்கள் அப்பேரணியில் கலந்துகொள்வதற்கு காரணமாக இருந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றாரவர்.

ஏன் அவரும் இவரும் அப்பேரணியில் இருந்தனர் என்று கேட்டு நேரத்தையும் முயற்சிகளையும் வீணாக்க வேண்டாம். அவர்கள் ஏன் அங்கு இருந்தனர் என்பது அதிகாரத்தினருக்கு தெரியவில்லை என்றால், கேட்பவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்றாரவர்.

விசாரிக்கப்படுபவர்களில் முன்னாள் பிரதமரும் ஒருவராவார். அப்பேரணியில் அவர் பேசியது ஒரு கிரிமினல் அவதூறாகும் என்ற அடிப்படையில் அவர் விசாரிக்கப்படுகிறார்.

மகாதிருடன், அப்பேரணியில் கலந்து கொண்ட இதர முக்கிய புள்ளிகளும் போலீசாரால் விசாரிக்கபடுவர் என்று ஐஜிபி காலிட் அபு பாக்கார் கூறினார்.