முகைதின்: தலைவர்கள் இனவாதம் பேசி ‘ஹீரோக்கள்’ ஆகப் பார்க்கிறார்கள்

muhyஅம்னோ  துணைத்  தலைவர்   முகைதின்  யாசின்,  இன  உணர்வுகளை  உசுப்பி  விடுவதற்காக  நிகழ்வுகள்  நடத்தப்படுவது  பற்றிக்  கவலை  தெரிவித்தார்.

இப்படிப்பட்ட  நிகழ்வுகளை  ஏற்பாடு  செய்கின்றவர்கள்  குறுகிய  அரசியல்  நோக்கம்  கொண்டவர்கள்  என்பதுடன் அவர்களின்  செய்கை  சமுதாயத்தில்   அச்சத்தை  உண்டு  பண்ணுகிறது  என்றும்  அவர்  சொன்னார்.

யார்,  எவர்  என்பதை அவர்  குறிப்பிடவில்லை என்றாலும்,  மலாய்  மானம்  காக்க  ஹிம்புனான்  ரக்யாட்  பெர்சத்து  பேரணி நடத்தப்பட்டு  இரண்டு  நாள்கள்  ஆகும்  வேளையில்  இன்று  அவர்  பாகோவில்  பேசியபோது  இவ்வாறு  கூறினார்.

“சில  அரசியல்வாதிகள்  இனத்  தேவைகளுக்கு  மேலாக  தங்களின்  அரசியல்  நோக்கங்களுக்கு  முன்னுரிமை  கொடுக்கிறார்கள். அதனால் தங்கள்  சமூகத்தாரிடையே  ஹீரோக்கள்  ஆக  வேண்டும்  என்பதற்காக  உரக்கப்  பேசுகிறார்கள்.

“அதே  வேளை  அது(அவர்களின்  பேச்சு)  மற்ற  இனங்களுக்கு  அச்சமூட்டுகிறது.  இது  நல்லதல்ல.

“பாகோ  மக்கள்  இப்படி  ஆவதை  நான்  விரும்பவில்லை. பாகோ-வில்  எல்லாம்  நன்றாகவே  உள்ளது.  இங்கு  சச்சரவுகள்  இல்லை”, என்று  முகைதின்  குறிப்பிட்டார்.