இன்று சர்வதேச அமைதி தினம் !

 

அமைதிஇன்றைய உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனிமனித வாழ்க்தைக் தரம் உயர்ந்துள்ளது. இவை நீடித்திருப்பதற்கு உலகில் அமைதி நிலவுவது அவசியம். இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது ஒட்டு மொத்த உலக நாடுகளின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் செப்., 21ம் தேதி, சர்வதேச அமைதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1981ல் இத்தினம் தொடங்கப்பட்டது. உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

தீர்வாகுமா போர் : இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் அனைத்து துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி ஆக்கப்பூர்வ விதத்தில் அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகின்றன.

முன்பு சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு பிரச்னையில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாடு மீது அயுத நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதற்கு இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஆதரவும், ரஷ்யா, சீனா ஆகியவை எதிர்ப்பும் தெரிவித்தன. இதனால் உலகம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது. நல்லவேளையாக கடைசியில் அந்த திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது. அனைத்து நாடுகளும், தங்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அமைதியான உலகை உருவாக்கலாம்.

நன்றி

http://ekuruvi.com/international-peace-day-today/ekuruviTamilNews