குறித்த நேரத்தில் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்யாமல் ‘நொண்டிச் சாக்கு’ சொல்கிறது 1எம்டிபி

lameவிசாரணையாளர்கள்  ஆவணங்களை  எடுத்துச்  சென்று விட்டார்கள்  அதனால்தான் உரிய  நேரத்தில்  தணிக்கை  செய்யப்பட்ட  கணக்கறிக்கைகளைத்  தாக்கல்  செய்ய  முடியவில்லை  என்று  1எம்டிபி  காரணம்  கூறுவதை  அபத்தம்  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தார  எம்பி  டோனி  புவா.

செப்டம்பர் 30க்குள் கணக்குகளைத்  தணிக்கை  செய்து  தாக்கல்   செய்யும்  எண்ணம்  1எம்டிபிக்குக்  கிடையாது  என்றும்  அதை  மூடிமறைக்கவே  அது  இப்படி  ஒரு  விளக்கத்தை  முன்வைத்துள்ளது  என்றாரவர்.

“இது  ஒரு  நொண்டிச் சாக்கு. பொதுக் கணக்குக்குழு  1எம்டிபி-இன்  கணக்காய்வாளர் Deloitte Malaysia-வைச்  சந்தித்து  விசாரணை  நடத்தியபோதே  2015 ஜூன்  முடிய, Deloitte கணக்காய்வைச்  செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படவுமில்லை  கணக்காய்வு  செய்ய  அனுமதிக்கப்படவுமில்லை  என்பது தெரிந்து  விட்டது.

“அதன்  பின்னர்  அப்போதைய  பிஏசி  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட், Deloitte கணக்காய்வைத்  தொடங்க  நிதி  அமைச்சு  இன்னும்  பணிக்கவில்லை  என்று  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“ஆக, எல்லா  ஆவணங்களும்  விசாரணையாளர்களிடம்  இருப்பதாகக்  கூறுவது  செப்டம்பர்  30க்குள்  கணக்கறிக்கையை  வெளியிடும்  எண்ணம்  1எம்டிபிக்குக்  கிடையாது  என்பதை  மூடுமறைப்பதற்காக  சொல்லப்படும்  ஒரு  நொண்டிச்  சாக்கு”, என  புவா  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.