ஆட்சியாளார்கள்: 1எம்டிபி விசாரணை முடிக்கப்பட வேண்டும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

 

Rulersconference1எம்டிபி பற்றிய விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் மாநாடு கட்டளையிட்டது.

“விசாரணயின் முடிவுகள் முழுமையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் அரசாங்கத்தின் நேர்மை பற்றியும் அது உண்மையை மறைக்காது என்பது குறித்தும் மக்கள் நம்பிக்கை கொள்வார்கள்.

“விளக்கம் அளிக்கவும் திருப்திகரமான பதில்கள் அளிக்கவும் தவறுவது நம்பிக்கை நெருக்கடியை ஏற்படுத்தும்” என்று கூறும் சுல்தான்களின் அறிக்கையை ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் சைட் டானியல் சைட் அஹமட் வெளியிட்டார்.

பெர்னாமா வெளியிட்ட அந்த கூட்டறிக்கையில் விசாரணையின் நோக்கம் முற்றுப்பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த 1எம்டிபி பிரச்சனை விவேகமான முறையில் கையாளப்படாமல் இழுத்துக் கொண்டே போகுமானால், அது பொருளாதாரத்தையும் மக்களின் நலன்களையும் பாதிக்கும்.

அது பொது அமளியைக்கூட உண்டாக்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.