பாஸ்: ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது முதலில் கலந்துரையாடல் தேவை

takiபிரதமர்  நஜிப்புக்கு  எதிராக எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில்  கொண்டுவரத்  திட்டமிட்டுள்ள  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  நடத்தக்  கோரும்  தீர்மானத்தை  பாஸ்  ஆதரிக்கும். ஆனால், ஒன்று. முதலில்  அதை நன்கு  விவாதிக்க  வேண்டும்.

எதிரணி  சகாக்கள்  எழுப்பும்  விவகாரங்களுக்கு  ஆதரவளிக்க தம்  கட்சி  எம்பிகள்  எப்போதுமே  தயாராக  இருக்கிறார்கள். ஆனால்,  முதலில்  விவகாரங்களைத்  தெளிவாக  விவாதித்து  விட  வேண்டும்  என  பாஸ்  தலைமைச்  செயலாளர்  தகியுடின்  ஹசான்  கூறினார்.

“நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  பற்றிக்  கலந்துரையாட  பாஸ்  ஆயத்தமாகவுள்ளது. அதை  ஆதரிப்போமா  இல்லையா  என்பதை இப்போதைக்குச்  சொல்ல  முடியாது. முதலில்  தீர்மானத்தைப்  பார்க்க  வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, அது  பிரதமரைப்  பதவி  விலகச்  சொல்லும்  தீர்மானம் மட்டும்தானா  என்பது  தெரிய  வேண்டும்”, என  பாஸின்  நாடாளுமன்ற கொறடாவான தகியுடின்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.