‘செலாக்கா மலாயு’ என்று சொல்லவில்லை: அந்தோனி லோக்: மறுப்பு

lokeகுடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்றதற்காகக்  கைது  செய்யப்பட்ட சிரம்பான் எம்பி அந்தோனி லோக்,  லாக்-அப்பிலிருந்து  வெளிவந்தவுடனேயே  ஒரு  புதிய  சர்ச்சையில்  சிக்கிக்  கொண்டிருக்கிறார்.

அவர் நேற்று கைது  செய்யப்பட்டபோது  ‘செலாக்கா  புன்யா  மலாயு’ என்று உரத்த  குரலில்  சத்தமிட்டாராம்.

நெகிரி செம்பிலான், கம்போங் உலு திமியாங்கில்,  சுமார் 100  வீடுகள்  உடைபடுவதைத்  தடுக்க  முயன்று  தோல்வியுற்ற  லோக், போலீஸ்  வாகனத்தில் ஏற்றப்படும்போது  போலீசார்  நோக்கி  ஆத்திரத்துடன்  சத்தம்  போடுவதைக்  காண்பிக்கும்  காணொளி  ஒன்று  இப்போது  சமூக வலைத்தளங்களில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது.

அதை  வைத்து  Gerakan Merah Pejuang Negara  என்னும்  என்ஜிஓ  இன்று  காலை  சிரம்பானில்  போலீசில்  புகார்  செய்தது.

ஆனால்.  லோக்  மலாய்க்காரர்களை  நோக்கி  அவ்வாறு  சொல்லவில்லை  என்றார்.

“நான் ‘Celaka Anwar Yeoh’ என்றுதான்  சொன்னேன். அது அன்வார் இயோதான். ஏன்தான்  நான்  ‘செலாக்கா மலாயு’  என்று சத்தமிட்டதாக  சொல்கிறார்களோ,  தெரியவில்லை”,  என்றாரவர்.

செலாக்கா  மலாயு  விவகாரம்  தொடர்பில்  காணொளியைக்  காண்பித்து  போலீசும்  தம்மிடம்  விசாரணை  செய்ததாக  லோக்  கூறினார்.

அவர்  நேற்று  கைது  செய்யப்பட்டு  12 மணி  நேரத்துக்குப்  பின்னர்  இரவு  8  மணிக்கு  விடுவிகக்ப்பட்டார். விடுதலை  செய்யப்பட்டதும் தம்மீது  கூறப்படும்  அவதூறை  மறுத்து போலீஸ்  புகார்  ஒன்றைச்  செய்தார்.