இனவாதப் பேரணிகளுக்கு இனி இடமில்லை: அரசாங்கம் எச்சரிக்கை

nur jaஇனவாத  ஆர்ப்பாட்டங்கள்   நடத்துவதை  நிறுத்த  வேண்டும்  என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  வலியுறுத்தினார்.

“இப்படிப்பட்ட  பேரணிகளால்  நிலைமை  மோசமாகிறது,  பொது  அமைதியும்  கெடுகிறது.

“இது  நாட்டுக்கும்  நல்லதல்ல”, என  பூலாய்  எம்பியுமான   நூர்  ஜஸ்லான்  கூறினார்.

“பொது  அமைதிதான்  பொருளாதார  வளத்துக்கும்  இன  நல்லுறவுக்கும்  நன்னம்பிக்கைக்கும்  அடிப்படை”, என்றவர்  இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

பெரும்பாலான  பேரணிகள்  சட்டவிரோதமானவைதான்  என்றாரவர்.  ஏனென்றால்  ஏற்பாட்டாளர்கள்  சம்பந்தப்பட்ட  துறைகளிடம்  அனுமதி  பெறுவதில்லை.

“பேரணி  நடத்தப்படும்போது  பேரணி  நடக்கும்  இடங்களின்  சொந்தக்காரர்களிடம்  அனுமதி  பெற  வேண்டும். அவர்கள்  அனுமதிக்காவிட்டால் பேரணி  சட்டவிரோதமானதுதான்”, என்றார்.