ஹுசாம்: சாகும்வரை பாஸ் கட்சிதான்

musaஅவரின் சகாக்களில்  சிலர்  பாஸிலிருந்து  விலகி  புதுக்  கட்சி  அமைத்துக்  கொண்டார்கள்  என்றாலும்  அக்கட்சியின்  முன்னாள்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா  சாகும்வரை  பாஸ்தான்  என்று  சூளுரைத்துள்ளார்.

அவரைப் பற்றிப்  பலவாறு  குறைகூறப்பட்டிருக்கலாம் பல  ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டிருக்கலாம்  ஆனாலும்  அவர்  இன்னமும்  பாஸின்  விசுவாசமிக்க  உறுப்பினராகத்தான்  இருக்கிறார்.

“முடிந்தால்  சாகும்வரை  பாஸில்  இருக்கவே விரும்புகிறேன்”, என்று  அவர்  கூறியதாக  சினார்  ஹரியான்  கூறியது.