ஓராங் அஸ்லி சிறார்களைக் கண்டுபிடிக்க அமைச்சு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது

ministryகாணாமல்போன  ஏழு  ஓராங்  அஸ்லி பிள்ளைகளையும்  கண்டுபிடிக்க   அதிகாரிகள்  எல்லா  வகையிலும்  முயன்றதாக  மகளிர், குடும்ப, சமூக  மேம்பாட்டு  துணை  அமைச்சர்  அசிசா  முகம்மட்  டுன்  கூறினார்.

“அந்த  எழுவரையும்  தேடுவதை  அதிகாரிகள்  நிறுத்தவே  இல்லை.

“சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  அனைவருமே  களத்தில்  இறங்கி  அவர்களைத்  தேடினார்கள். அந்த  வகையில்  எல்லா வித  முயற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டன”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

பிள்ளைகள்  காணாமல்போனதாக  அறிவிக்கப்பட்டதும்  ஓராங்  அஸ்லி  விவகாரத்  துறை  உடனடியாக  நடவடிக்கையில்  இறங்கியது  என  அசிசா  கூறினார்.

அமைச்சைப்  பொருத்தவரை   காணமல்போன  பிள்ளைகளின்  குடும்பங்களுக்கு  உதவ  ஆயத்தமாக  இருக்கிறது. அவர்களுக்கு  ஆலோசனை  வழங்கப்படும்  பண  உதவி  தேவையென்றால்  அதுவும்  கொடுக்கப்படும்.

“அது  எங்கள்  பொறுப்பு. அவர்களுக்குத்  தேவையான  உதவிகளை  நாங்கள்  செய்வோம்”, என்றாரவர்.

ஆகஸ்ட்  23-இல், காணாமல்போன  எழுவரில்  இருவரின்  சடலங்கள் இதுவரை  கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.