தமிழ்ப்பள்ளியில் கற்ற மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி

IQ 3மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு அடுத்த வருடத்தோடு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் எல்லையை எட்டும் தறுவாயில் தமிழ்க் கல்வியோடு தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேலும் வலுசேர்க்க அறிவுத்திறன் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை சிலாங்கூர் மாநில அரசுடன் கூட்டாக இணைந்து சிலாங்கூர் தமிழ்ச் சங்கமும், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியமும், தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கமும் நடத்துகின்றனர்.

தாய்மொழி பள்ளியில் கல்வி கற்பவர்களின் அறிவுத்திறன் ஒரே மொழிப்பள்ளியில் கல்வி கற்பவர்களை விட அதிகமாக இருக்கும் என்கிறது ஆய்வுகள். இதில் உள்ள உண்மையை வெளிக்கொணர இந்த  அறிவுத்திறன் போட்டியை நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப்போட்டியில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் கல்வி பயின்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இது ஓர் ஆய்வு சார்புடையதாக இருப்பதால் இதில் பங்கெடுக்க 200 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.

200 years logoதமிழ்ப்பள்ளியில் பயின்று தற்போது படிவம் ஒன்று முதல் படிவம் 5 வரையில் பயிலும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் எதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. சமயோசித அறிவும், அதிகமான புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும், பொது அறிவில் ஆர்வம் உள்ள தருக்க சிந்தனை (logical thinking) கொண்டவர்களாகவும் இருப்பது நலம்.

இந்த போட்டி அடுத்த மாதம் 7-ஆம் தேதி சனிக்கிழமை (7-11-2015) காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையில் கிள்ளானில் உள்ள சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் நடைபெறும்.

இதற்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை 4.12.2015-இல் மிட்லண்ஸ் மாநாட்டு மையத்தில் மாலை மணி 6.30 க்கு நடைபெறும். சிறந்த 20 மாணவர்களுக்கு ‘மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி விழா பதக்கங்கள் வழங்கப்படும்.  பங்கெடுக்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

போட்டியில் பங்கு பெற ஆர்வம் கொண்ட மாணவர்கள், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்களின் பெயர், அ.கா. எண், படித்த தமிழ்ப்பள்ளியின் பெயர், கைபேசி எண் ஆகியவற்றை அனுப்பவேண்டும். முதலில் பதியும் 200 மாணவர்களுக்குத்தான் வாய்ப்பளிக்கப்படும். பதிவுக்கான இறுதிநாள் 30.10.2015 ஆகும்.  

இது சார்பாக மேல் விபரங்கள் வேண்டுவோர் கீழ்க்கண்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

திரு உதயசூரியன் – 0162108760, திரு சேகரன் – 0162510752, திரு முருகன் – 0193416685.