“தமிழ் தேசியத்தை வளரவிட மாட்டேன்” என்ற தெலுங்கர் வை.கோவுக்கு பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மலேசியாவில் என்ன தமிழன் அரசியல் வக்காலத்து ?

vaivaiபாவேந்தன் பாரதியின் வரிகள்…
“தேடிச்சோறு நிதம் தின்று -பல 
சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று -பிறர் 
வாடப் பல் செயல்கள் செய்து -நரை 
கூடிக்கிழ பருவம் மெய்து -கொடுங்
கூற்றை கிரையென பின்மாயும் -பல 
வேடிக்கை மனிதரை போல -நான் 
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? ”

நாங்கள் தமிழன் தோழா !

“தமிழ் தேசியத்தை வளரவிட மாட்டேன்” என்ற வை.கோவிற்கு தமிழனின் சிவப்புக் குருதி கம்பளமா ?         

இருண்ட காலத்தை விட்டு எழுச்சி பெற்று தமிழினம் தமிழர் தேசியத்தை நோக்கி முன்னேறும் போது, தமிழர் தேசியத்தை வளரவிடமாட்டேன். தமிழ் நாடு , திராவிடர்களின் (வந்தேறிகள்) சொத்து என்று கடந்த முறை பினாங்குத் தீவிற்கு வந்து,  சென்னை திரும்பியதும் வீர வசனம் பேசிய இந்த திராவிட வை.கோவை மீண்டும் இங்கே வரவேற்றுள்ள பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு மலேசியாவில் இயங்கும் தமிழர் இயக்கங்களின் சார்பில் நாங்கள் கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொண்டுள்ளன.

பேராசிரியர் இராமசாமி அவர்கள் தனது தமிழர் தேசியக் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். தமிழர் தேசியத்தை  வளரவிடமாட்டேன் என்று சூழுரைத்த கூறிய ஒருவரை மீண்டும் இந்த மண்ணிற்கு அழைத்து மரியாதை செய்வது வியப்பாகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. பேராசிரியர் அவர்கள் மீனுக்குத் தலையையும் பாம்பிற்கு வாலையும் கட்டும் விலாங்கு மீனாக விளங்குகிறாரா என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

‘தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்’  என்று தலைப்பிட்டு அதில் வை.கோ எழுச்சியுரையாற்ற ஏற்பாடு செய்துள்ளார்கள். தமிழீழ தாயகம் என்பதே தமிழர் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழின தேசியத் தலவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தமிழர் தேசியம் தொட்டுத்தான் பேசியிருக்கிறாரே தவிர திரவிட தேசியம் தொட்டுப் பேசியதில்லை. அந்தக் கருத்துக்கு எதிர்ப்பான ஒருவரை அழைத்து அதைப்பற்றி பேசச் சொல்வது அறிவார்ந்த செயலா ? வை.கோ ஒரு அரசியல்வாதி. அதிலும் தேர்தல் நேரங்களில் அவர் போடும் நாடகங்களும், இணையும் கூட்டணிகளும் எவ்வளவு வேடிக்கையானவை என்பதை  தமிழர்கள் நன்கு அறிவர். வை.கோவைப் போன்று சந்தர்ப்பவாத அரசியல் வாதியாக பேரசிரியரும் மாறிவிடக்கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள். தமிழர்களிடம் இருக்கின்ற ஆதரவை பேராசிரியர் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழர்களின் சினத்தைத் தூண்டக்கூடிய செயல்களை செயல்படுத்தாமல் இருக்க அவர் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஈழத்திற்கு ஆதரவானவர் என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வை.கோவை இங்கு வரவழைத்ததற்கு நியாயம் கற்பிக்கக் கூடாது.  ஈழம் என்பது இன்று எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் வியாபாரம் செய்வதற்கான முதலீடாகிவிட்டது. எனவே பேராசிரியர் அவர்கள் மலேசியாவில் வை.கோ வேறு தமிழர் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பேராசிரியர் அவர்களுக்கும் வை.கோவுக்கும் இடையிலான நட்புறவைப் பற்றி நாங்கள் இங்கே எதுவும் பேசவில்லை. அது அவர்களின் சொந்த நிலைப்பாடு. ஆனால் தமிழரின் எழுச்சிக்கும், தமிழர் தேசியத்திற்கும் பொது எதிரியான வை.கோவை மலேசியத் தமிழர்களிடையே உத்தமர் போலவும் ஒரு போராளி போலவும் உருவகப்படுத்த பேராசிரியரின் இந்த நடவடிக்கைகள் உதவிடும். தமிழர் தேசியத்திற்கும், நாம் தமிழர்,தமிழர் களம் போன்ற தமிழர் இயக்கங்களுக்கு   எதிரானவருடன் இணைந்து நீங்களும் வரலாற்றுப் பிழை செய்துவிடக் கூடாது என்று தமிழர் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழர் அமைப்புகளான நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

மலேசியத தமிழர்களையும் தமிழக தமிழர்களையும்   குழப்பி  ”தமிழனைப்போல”  புற  அரசியல் நடத்தும் உங்கள் எண்ணங்களை நிறுத்திக்கொள்ளவும்.

நாங்கள் பச்சைததமிழர்கள் எங்களுக்கு வேறு வண்ணங்கள் இல்லை.!

ம .அ.பொன் ரங்கன், மலேசியா. 
தமிழர் குரல் /உலகத் தமிழர் பாதுக்கப்பு மையம்/
தமிழர் நடவடிக்கை குழு./ தமிழர் களம்./ நமது தமிழர் சக்தி