கொண்டோ வாங்கியதில் மோசடி குற்றத்திலிருந்து என்எப்சி தலைவர் விடுதலை

nfcசெஷன்ஸ்  நீதிமன்றம்  நேசனல்  பீட்லோட்  கார்ப்பரேசன் (என்எப்சி) தலைவர்  முகம்மட்  சாலே  இஸ்மாயிலை  இரண்டு  நம்பிக்கை  மோசடி  குற்றச்சாட்டிலிருந்து  இன்று  விடுவித்தது.

என்எப்சி-இன்  ரிம9,758,140  நிதியைக்  கொண்டு  கோலாலும்பூர்,  பங்சாரில்  இரண்டு  ஆடம்பர  அடுக்கக  வீடுகள்  வாங்கியதாக அவர்மீது  குற்றம்  சாட்டப்பட்டிருந்தது. அதில்  மோசடி  எதுவும்  நிகழவில்லை  என்று  நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளதாக  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது.

முகம்மட்  சாலே  அம்னோ  மகளிர்  தலைவர்  ஷரிசாட்  அப்துல்  ஜாலிலின்  கணவராவார்.

என்எப்சி  கால்நடை வளர்ப்புத்  திட்டத்துக்காக  அரசாங்கத்திடமிருந்து  கடன்  பெற்றிருந்தது.