அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நிற்பதால் ஐ.நா. சபையும் அடிபணிந்து விட்டது! லக்ஷமன் கிரியெல்ல

laxman_giriyella_001இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்பதால் இலங்கை விடயத்தில் ஐ.நா. சபையும் அடிபணிந்து நிற்பதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பெருந்தெருக்கள் அபிவிருத்தி, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டின் ஊடாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த நல்லிணக்க அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாடு பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை கூட இலங்கை தொடர்பான தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதானால் இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை கூட இப்போது எமக்கு அடிபணிந்த நிலையில் தான்நடந்து கொள்கின்றது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: