1எம்டிபி-ஆல் அதன் கடன்களுக்குத் தீர்வு காண முடியும்; அரசாங்க உதவி தேவைப்படாது

johariஅரசாங்க  உதவியில்லாமலேயே  அதன்  கடன் பிரச்னைக்கும்  பணப்புழக்கத்துக்கும்  தீர்வு  காண  முடியும்  என்று  1எம்டிபி  நம்புவதாக  இன்று  மக்களவையில்  தெரிவிக்கப்பட்டது.

அந்த  வகையில்  1எம்டிபி  விவகாரம்  ரிங்கிட்  வீழ்ச்சிக்குக்  காரணமல்ல  என  நிதி  துணை  அமைச்சர்  ஜொஹாரி  அப்துல்  கனி  கூறினார்.

“மாறாக,  பல  வெளிக்  காரணிகளால்,  எண்ணெய்  விலை  இறக்கம்,  ஏற்றுமதியை  நம்பியிருக்கும்  உலகப்  பொருளாதாரம்  போன்றவற்றால்  ரிங்கிட்  அழுத்தத்துக்கு  இலக்காகியுள்ளது”, என்றவர்  சொன்னார்.

1எம்டிபி  சீரமைப்புத்  திட்டத்தின்கீழ்  அந்நிறுவனத்தின்  கடன்களை  விரைவாகக்   குறைக்க  நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு  வருவதாக  ஜொஹாரி  கூறினார்.