தமிழீழ விடுதலைப்போராட்டம் வேறொரு திசையில் முன்நோக்கி புறப்படத் தயாராகுறது!

ealam_tamil_001சற்றுமுன் தமிழீழ தாயகத்தில் தேசிய மாவீரர் நாள் உணர்வெளிச்சியுடன் தமிழீழ மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலகட்டங்களில் தமிழீழ தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ மக்களாலும், தமிழீழ அரசாலும் வெகு விமர்சையாக ஏற்பாடுசெய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டுவந்துள்ளது.

எமது தமிழீழ தேசத்தின் வீடுதலைக்காய், எமது மக்களின் உரிமைகளுக்காய், எதிர்காலத் தலைமுறையின் வாழ்விற்காய், தமிழ் மொழியினதும் தமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்பிற்கும் இருப்பிற்குமாய் தங்கள் உன்னத உரிர்களை எதிரியுடன் போராடி ஈகம் செய்த மாவீரர்களின் வீரவரலாறு என்பது உலகத்தமிழர்களைப் பொறுத்தவரையில் ஓர் வீரவணக்க நிகழ்வு என்பதற்கு அப்பால் அவர்களது தொடர் போராட்டத்தின் நீட்சியை மாவீரக்களின் கல்லறைகளின் மீது உறுதியெடுக்கும் புரட்சித்தினம் ஆகும்.

மாவீரர்களுக்கும் மக்களுக்குமான உணர்பூர்வமான இப் பாசப்பிணைப்பே எமது தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரக இருந்துவருகிறது. எமது மக்களை
ஓர் குடையின் கீழ் இணைக்கும் மகத்தான சக்தியாக பிரணாமிக்கிறது. எமது இலட்சிய உறுதிப்பாட்டின் திண்மமாகவும் திகழ்கிறது.

அதனால் தான் சிறீலங்கா இனப்படுகொலை அரசு மாவீரர் துயிலுமில்லங்களை அழித்து எமது அரசியல் வேணவாவை வேரறுக்க திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணங்களைத் தாங்கித் துயில்கொள்ளும் புனித  வழிபாட்டுக்குரியவர்களின் வீர உறைவிடங்களை அழிப்பதன் மூலம் தமிழீழ மக்களின் எண்ணங்களை அழித்துவிட முடியாது என்று தமிழீழ மக்கள் இன்று மீண்டும்மொருமுறை சிங்கள பயங்கரவாத அரசிற்கு நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

இராணுவ அடக்குமுறைக்குள்ளும், கருத்துச்சுதந்திரம் முற்றாக பறிக்கப்பட்டு உயிராபத்து ஏற்படும் என்ற நிலையிலும் பல தமிழீழ இளையோர்களும், தமிழீழ மக்களும் இணைந்து இம்முறை வெகு சிறப்பாக மாவீரர் தினத்தை கடைப்பிடித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டிற்குப் பின் கூடிய அளவில் மக்கள் கூடி மாவீரர்தினம் கடைப்பிடிக்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

இளையோர்களினது ஏற்பாட்டில் மக்கள் தன்னெழுச்சியாக ஏற்பாடுசெய்து கடைப்பிடிக்கப்பட்ட இவ் அதிரடி சம்பவமானது தமிழீழ விடுதலைப்போராட்டம் வேறொரு திசையில் முன்நோக்கி புறப்படத் தயாராகுறது என்பதே இவ்வருட மாவீரர் நாளின் உலகத்தமிழருக்கான செய்தியாகும்.

வீரத்துருவன்

-http://www.tamilwin.com

TAGS: