அசிசா: படமெடுத்துக் கொள்வது அல்ல, 1எம்டிபி சொத்துகளை விற்பதே தேச துரோகம்

azizahபடமெடுத்துக்  கொள்வது  தேச  துரோகச்  செயலென்று  சொல்ல  முடியாது. அதனோடு  ஒப்பிடும்போது  1எம்டிபியின்  மின்  உற்பத்தி  நிறுவனமான  எட்ரா  குளோபல்  என்ர்ஜி  சென். பெர்ஹாட்டை  சீனாவின்  ஜெனரல்  நியுக்லியர்  பவர்  கார்ப்பரேசனுக்கு  விற்றதுதான்  தேச  துரோகமாகும்  என்கிறார்  பிகேஆர் தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்.

“1எம்டிபி-இன்  மின் உற்பத்தி  நிறுவனத்தை வாங்குவதற்கு  உள்ளூர்  நிறுவனமான  தெனாகா  நேசனலுக்கு  வாய்ப்பு  வழங்கப்படாமல்  அது   சீன  நிறுவனமொன்றுக்கு எப்படி  விற்கப்பட்டது  என்பதைக்  கண்டோம்”, என  பிகேஆர்  தேசிய   மாநாட்டில்  கொள்கையுரை  ஆற்றியபோது  அவர்  குறிப்பிட்டார்.

“இதுதான்  தேச  துரோகம். (சூலு  இளவரசியுடன்) ஒரு  படமெடுத்துக்  கொள்வதல்ல”, என்றாரவர்.

சீனர்கள்  அந்நிறுவனத்தை  வாங்கியதால்  மின்  கட்டணம்  உயரும்   சாத்தியமிருப்பதாக  வான்  அசிசா  குறிப்பிட்டார். இதனால்  மக்களின்  சுமை  கூடும்.

“இவ்விற்பனையின்  நோக்கமே  1எம்டிபி-யை  மீட்டெடுப்பதுதான்… அந்த  வகையில் இது  எதிர்மறையான  தாக்கத்தையும்  மக்களின்  நலனையும்  புறக்கணிக்கும் ஒரு  பொருளாதார  துரோகமாகும்”, என்றவர்  சாடினார்.

“வேறு  எதையெல்லாம்  விற்கப்  போகிறோம்? அன்பு  மலேசியர்களே,  தயை செய்து விழித்துக்  கொள்ளுங்கள் நிதி  அடிப்படையில்  1எம்டிபி-யைத் தூக்கிப்  பிடித்து  நிறுத்த  வேறு  எதையெல்லாம்  விற்கப்  போகிறோம்?”, என்று  வான்  அசிசா  வினவினார்.