ஜாஹிட்: மகாதிர் அம்னோ ஏஜிஎம்-முக்கு அழைக்கப்படுவது உறுதி

hamidஅம்னோ  உறுப்பினர்கள்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறும்  எல்லாக்  கருத்துகளையும்  ஏற்றுக்கொள்வதில்லை ஆனாலும்  அவரை  மதிக்கிறார்கள். த  ஸ்டாருக்கு  வழங்கிய  நேர்காணல்  ஒன்றில்  அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிட்  இவ்வாறு  கூறினார்.

“அம்னோவில்  பெரும்பாலோர்  இன்னும்  அவரை  மதிக்கிறார்கள். ஆனால், அவரை  மதிப்பது  வேறு,  அவரின்  கருத்துகளை  ஏற்றுக்கொள்வது  வேறு”, என்றாரவர்.

அம்னோவையும்  அதன்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்  மகாதிர்  தொடர்ந்து  குறைகூறி  வந்தாலும்  கட்சியில்  பலர்  அவரை  மதிக்கிறார்கள்  என்று  கூறிய  ஜாஹிட்  டிசம்பர்  10  அம்னோ  பேரவைக்  கூட்டத்தில் கலந்து  அவரும்  அழைக்கப்பட்டிருக்கிறார்  என்றார்.

“விரைவில்  அவருக்கு  அழைப்பு  அனுப்பப்படும்  என்று  நம்புகிறேன். அதை  ஏற்பதும்  மறுப்பதும்  அவரைப்  பொறுத்தது”, என்றவர்  சொன்னார்.

துணைப்  பிரதமராக  நியமிக்கப்பட்ட  பின்னர்,  மகாதிரைச்  சென்று  கண்டதாகவும்   ஜாஹிட்  தெரிவித்தார்.

“டாக்டர்  மகாதிரை அவரது  இல்லத்திலேயே  சென்று  கண்டேன். அதற்குமுன்பு  வேறு  விவகாரங்களுக்காக  அவரைச்  சென்று  பார்த்திருக்கிறேன்.  ஆனால்,  இம்முறை  மரியாதைக்காக  அவரைச்  சென்று  கண்டு அவரது  வழிகாட்டுதலையும்  அறிவுரையையும்  நாடினேன்.

“அவர்  வெளிப்படையாக  பேசினார். அவரது  கருத்துவேறுபாடுகளை  மதிக்கிறேன்”, என்றாரவர்.