பினாங்கு டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் ரிம2.6 பில்லியன் பற்றி வினவும் அட்டைகள்

placardபினாங்கு டிஏபி  ஆண்டுக்கூட்டம்,  அதன்  பேராளர்கள் ‘ரிம2.6 பில்லியன்  எங்கே’  என்று  எழுதப்பட்ட  அட்டைகளை  ஏந்தி  நிற்க  இன்று  கோலாகலமாக  தொடக்கம்  கண்டது.

நேற்று  பிகேஆர்  தேசிய  ஆண்டுக்  கூட்டத்திலும்  இதேபோன்றுதான்  நடந்தது. அதன்  பேராளர்களும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  2013  பொதுத்  தேர்தலுக்கு முன்பு அவரது  வங்கிக்  கணக்குக்கு  வந்துசேர்ந்த  மர்மமான  நன்கொடை  பற்றிக்  கேள்வி  எழுப்பும்  அட்டைகளை  ஏந்தியிருந்தனர்.

பதவி  விலகிச்  செல்லும் டிஏபி  மாநிலக்  குழுத்  தலைவர்  செள  கொன் இயோ  பல-வண்ண  பலூன்களைப்  பறக்க விட்டுக் கூட்டத்தைத்  தொடக்கி  வைத்தார்.

மாநிலக்  குழுவில்  உள்ள  15 இடங்களுக்கு 48 பேர்  போட்டியிடுகின்றனர்.