இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடை: நேபாளில் 5 லட்சம் மாணவர்கள் போராட்டம்

nepal_protests_001இந்தியா விதித்துள்ள அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடைக்கு எதிராக நேபாளத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாள நாட்டில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது.

நேபாளம் உலகின் ஒரே இந்து நாடாக இருந்தபோதும் மதச்சார்பற்ற அரசியல் சாசன அமைப்பைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய அரசு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.

நேபாளத்தில் உள்ள இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள், புதிய அரசியல் சாசனத்தால் தாங்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டு விட்டதாக போராட்டம் செய்து வந்துள்ளனர்.

மாதேஸிகள், இந்திய பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்களை இந்திய-நேபாள எல்லையில் இடைமறித்து நேபாளத்துக்குள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

மாதேஸிகள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தும் உள்ளதால், இந்த அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இந்திய அரசே விதித்துள்ளதாக நேபாளம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்தியாவின் இந்த மறைமுக பொருளாதாரத் தடையை கண்டித்து காத்மாண்டுவில் நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அந்த மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் 27 கி.மீ தூரத்துக்கு மனித சங்கிலி அமைத்துள்ளனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 5 லட்சம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது இந்திய அரசு, உடனடியாக பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டுள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: