மகாதிர்: கார்களின் விலை உயர்வுக்கு அரசாங்கமே காரணம், புரோட்டோன் அல்ல

protonகார்களின்  விலை  உயர்ந்திருப்பதற்கு  புரோட்டோனைக் குறை  சொல்லக்  கூடாது  என்கிறார்  புரோட்டோன்  தலைவர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

விலை  உயர்வுக்கு  புரோட்டோன்  காரணமல்ல  என்று  குறிப்பிட்ட  முன்னாள்  பிரதமர்,  அரசாங்கம்  நிறைய  வரி  வசூலிக்க  நினைக்கிறது  அதுதான்  காரணம்  என்றார்.

“உதாரணத்துக்கு  நீங்கள்  ஒரு  மெர்சிடிஸ்  பென்ஸ்  வாங்கினீர்கள்  என்றால்  அதற்கும்  புரோட்டனுக்கும்  சம்பந்தமே  இல்லை. பெரிய  கார்களுக்கு  அரசாங்கம்  கிட்டதட்ட 300 விழுக்காடு வரி  விதிக்கிறது”, என மகாதிர்  ஷா  ஆலமில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

புரோட்டோன்  மின்சார   கார் தயாரிப்பதற்கு  முறையான  ஒதுக்கீடு  இல்லை  என்றும்  மகாதிர்  வருத்தப்பட்டுக்  கொண்டார்.

“எங்களுக்கு  அரசாங்க  ஆதரவு  இல்லை. வடிவமைப்பு,  ஆராய்ச்சி,  மேம்பாடு  ஆகியவற்றுக்கு  எங்களுக்குப்  பணம்  கொடுக்கப்பட்டிருக்க  வேண்டும். ஆனால்,  கிடைக்கவில்லை”, என்றாரவர்.

பண ஆதரவைவிட  ஊக்கமளிப்பு  புரோட்டனுக்கு  மிகவும்  தேவைப்படுகிறது.