பெர்சே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மசீச நிறுவன உறுப்பினர் கட்சி நீக்கம் செய்யப்பட்டார்

mcaமசீச 76-வயது நிரம்பிய  மலாக்கா மகளிர்  பகுதி  ஆலோசகர்  கியான்  சிட்  ஹாரைக்  கட்சியிலிருந்து  நீக்கியது.

கியான்  1975-இல்,  மலாக்காவில்  மசீச  மகளிர்  பகுதியை  உருவாக்கியவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

“மற்ற  கட்சிகளின் நடவடிக்கையில்  பங்கேற்பது, செராமாக்களைச்  செவிமடுப்பது.  மற்ற  கட்சித்  தலைவர்களுடன்  படமெடுத்துக்கொள்வது எல்லாம்  வெவ்வேறு  கட்சிகளைச்  சேர்ந்தவர்களாக  இருந்தாலும்  நாம்  நண்பர்களே  என்பதைக்  காண்பிக்கிறது.

“எனக்கு  இதில்    பிரச்னை  இருப்பதாக  தெரியவில்லை. ஆனால்,  கட்சி(மசீச)  நான்  அதன் விதிகளை  மீறி விட்டதாக  நினைத்து  என்னை  விலக்க  முடிவு  செய்துள்ளது”, என்று  அவர்  சீனா  பிரஸ்  இணைய  தளத்தில்  பதிவேற்றம்  செய்யப்பட்ட  காணொளியில்  கூறினார்.

இன்று  காலை  மசீச  தலைமைச்  செயலாளர்  ஒங்  கா   சுவானிடமிருந்து  கட்சிநீக்கம்  செய்யப்படும்  கடிதத்தை  அவர்  பெற்றார்