‘கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்க வேண்டும்

fare-kluaகேஎல்ஐஏ  எக்ஸ்பிரஸ், கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்துக்கான  ஒருவழிப் பயணக்  கட்டணத்தை  ரிம35-இலிருந்து ரிம55 ஆக  உயர்த்தியிருப்பதை  ஒரு  “பகல்  கொள்ளை”  என்று  வருணித்த  டிஏபி-இன்  செர்டாங்  எம்பி ஒங்  கியான்  மிங்,  அது  எப்படி  அனுமதிக்கப்பட்டது  என்பதை  போக்குவரத்து  அமைச்சர்  லியோங்  தியோங்  லாய்  விளக்க  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்தார்.

கேஎல்ஐஏ2  விரிவாக்கப் பகுதி  திறக்கப்பட்ட  பின்னர்  கேல்ஐஏ எக்ஸ்பிரஸில்  பயணிகளின்  எண்ணிக்கை  40  விழுக்காடு  உயர்ந்துள்ளதாக  மதிப்பிடப்படுகிறது. அதனால்தான்  2014  இறுதியில்  ஆறு  புதிய  ரயில்  வண்டிகளுக்கு  ஆர்டர்  கொடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள்  எண்ணிக்கை  உயர்ந்ததால்  கேஎல்ஐஏ  எக்ஸ்பிரஸின்  வருமானமும்  அதிகரித்திருக்கும் என  ஒங்  கூறினார்.

கட்டண  உயர்வால்  கேஎல்ஐஏ-க்கும்  கேஎல்ஐஏ2-க்கும்  பயணம்  செய்யும் பயணிகள்  மட்டும்  பாதிக்கப்படவில்லை  புத்ரா  ஜெயா/ சைபர் ஜெயா  செல்வதற்கான  கட்டணமும்  ரிம9.50- இலிருந்து  ரிம14 ஆக  உயர்ந்துள்ளது  என்றாரவர்.