ஆஸ்ட்ரோ 2017-வரை துணைக்கோள ஒளிபரப்பில் தனியுரிமை பெற்றிருக்கும்

astroMeasat ஒளிபரப்பு நிறுவனம்(எம்பிஎன்ஸ்)  துணைக்கோள  ஒளிபரப்புச்  சேவையை  நடத்துவதற்கு  2017  பிப்ரவரி 28-வரை  தனியுரிமை  பெற்றிருக்கும் எனத்  தொடர்பு,  பல்லூடக  அமைச்சு  தெரிவித்தது.

இந்த  உரிமையை  மலேசிய  அரசாங்கம்  1997-இல்  அந்நிறுவனத்துக்கு  வழங்கியதாக  நாடாளுமன்றத்தில்  எழுத்துப்பூர்வமாக  வழங்கப்பட்ட  பதிலில் அமைச்சு  கூறிற்று.

2017  பிப்ரவரி  28-க்குப்  பின்னர்  மற்ற  நிறுவனங்களும்  கட்டணம்  செலுத்தும்  துணைக்கோள  ஒளிபரப்புச்  சேவை  நடத்துவதற்கு  விண்ணப்பிக்கலாம்.