இருமொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

BBC Tamiilமலேசியாவின் 300 தேசிய தொடக்கப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்படும். இது சார்பாக BBC  தமிழோசை  ஒரு பி்ரத்தியேகமான செய்தியை வெளியிட்டது. அதன் சாரம் வருமாறு:

மலேசியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய கல்வி செயல்திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் மலேசியாவிலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்தக் கொள்கையை சிறுபான்மை தமிழ் மற்றும் சீன சமூகங்கள் எதிர்க்கின்றன.

மலேசிய அரசு அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, அடுத்த கல்வியாண்டில் ஆரம்பக் கல்வியில், அறிவியில் மற்றும் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படவுள்ளன.

ஆனால், ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதே மாணவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் என அரசின் கொள்கையை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

Tamil school our choice in Tamilஐ நா சபையின் கல்வி மற்றும் கலாச்சாரத்துக்கான அமைப்பு யுனெஸ்கோ அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தாய்மொழிக் கல்வியே சிறந்தது எனச் சுட்டிக்காட்டியுள்ளது என்று மலேசிய அரசின் கொள்கையை எதிர்ப்பவர்களில் ஒருவரும், சுவாரம் எனும் மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குனருமான கா.ஆறுமுகம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நீண்டகால அடிப்படையில், மலாய் மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி தேசிய பாடசாலைகளை வலுப்படுத்தி, தமிழ் மற்றும் சீன மொழிப் பாடசாலைகளை இல்லாமல் செய்வதே மலேசிய அரசின் நோக்கமாக உள்ளது என அவர் கூறுகிறார்.

தமிழ் சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களே தமிழ்வழிக் கல்விப் பாடசாலைகளுக்கு செல்லும் சூழல் உள்ளது எனக் கூறும் ஆறுமுகம், அரசின் இருமொழிக் கல்விக் கொள்கை மூலம் சிறுபான்மை மக்களுக்கு பின்னடைவே ஏற்படும் எனவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.