இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியத்தின் உச்சம் ?

man_writingநான் சொல்ல வில்லை …கவிப்பேரரசு வைரமுத்துவின் 40 சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பதாதையின்
மேல் எழுதப்பட்டிருந்த விளமபர இளம்  விமர்சன வாசக வரிகள்.

நல்லதொரு புத்தக வெளியிடும் விழாதான் . மண்டபம் முழுக்க புதிய தமிழ் ஆர்வலர்கள். பார்வைக்கு எட்டிய அளவு தேடினேன் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை காணோம். ஒரு வேளை தமிழ் சினிமா கூட்டமா என்றும் பார்த்தேன் அந்த வாடையும் இல்லை. தமிழ் ஆசிரியர்களா ,பல்கலைகழக மாணவர்களா ?  சரி வந்தவர்கள் 500 பேரு இருப்பார்கள். போதும் போதும் என்ற ராஜேந்திரனின் குரல் கூவும் அளவிற்கு புத்தகம் விற்றது. மகிழ்ச்சியான வெற்றியான சிறப்பான ஏற்பாடுகளின் ஊடே சுகாதார அமைச்சரின் உரை ,,,விளையாட்டு துறை துணை அமைச்சர் உரை ,,ஐயா கார்த்திகேசுவின் நூல் ஆய்வு. சிறப்பான மின்னலின் புதிய அறிவிப்பாளர் கவிக்குயில் நிகழ்வாக்கம் மனதை மனமார வாழ்த்தியது.

நீண்ட நெருடலுக்குபின் தமிழக ..இந்திய கவிப்பேரரசு வைரமுத்துவின்  சிறுகதைகள் எனபதை காட்டிலும் அவரின் உரை விளையாட்டை கேற்க சனி மாலை தமிழ் பனி முகங்களை பார்த்தேன்.

அதில் நான் தனியாக சென்றிருந்த  காரணத்தால் இரு பக்க அமர்விலும் (புதிய) 70 வயது மதிக்க தக்க தமிழ் உணர்வாளர்கள் என்றே நான் முடிவும் கட்டினேன்.

கவிப்பேரரசு அவர்களை நான் கடைசியாக சந்தித்தது மன்னிக்கவும் பார்த்தது 27/10/2015 ல் தமிழர் நாட்டில் நடந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவில். நெருங்க முடியாதவர்கள் என்பதால் ஒரு தமிழ் ரசிகனாக இரு தினங்கள் தமிழ் பித்தனாக என் வேலைகளை விட்டு விட்டு இளகிய மனதில் இலக்கியம் காண சென்றேன்.

ஏனோ முந்தி பிடித்து மூத்தவர்களையும் அரசியல் வாதிகளையும் கைகூப்பும் பழக்கம் இலாத படியால் மேடை பக்கம் போக வில்லை.
அது ஒரு வகை இலக்கண கூச்சம். என்னுடைய உணர்வு தமிழும் தமிழனும் நடத்துவது  நல்லது என்பதால் மனதார வாழ்த்தும் பக்குவம் இருந்தது. மனசாட்சி சொன்ன உண்மை.

சரி இங்கு வருகிறேன் ..அந்த பெரியவர்கள் பேசிய விடயம் என்னையும் திடுக்கிட வைத்தது …நடப்பதோ ஒரு மாபெரும் இலக்கிய வாதியின் நூல் வெளியிடும் விழா ..நடதுபவரோ  நாடறிந்த நல்ல எழுத்தாளர் … “இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியத்தின் உச்சம்” என்ற பதாதையின் தலை எழுத்து பட்டறை பதிவு பற்றிய முனுமுனுப்பல்தான் அது ..இந்த கருத்தின் வினாவும்.

இது விளம்பர சொர்ச்சுவைக்காக எழுதப்பட்டதா? அல்லது இதுதான் ஆய்வின் அடிப்படையா ?   “இந்திய மொழிகள் தமிழுக்கு முந்தியதா தமிழை ஒப்பீடு செய்ய” என்று பெரியவர் கேட்டார் . நான் கூனி இருந்த என் உடலை நிமிர்த்தி அமர்ந்தேன். 18ம் நூற்றாண்டின்  சமீப கால பன்முக தனித்தமிழ் மறைமலை அடிகளாரின் தமிழ் ஆராய்சி பிறகு மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் தமிழ் உலக மொழிகளின் முதல் வரிசை பிறகு 6ம் இடத்தில வந்த அரசியல் விதிகளை நிதாநித்துப்பார்த்தேன். பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியிடு விழாவில் “வைரமுத்துவின் தமிழ் இலக்கிய உச்சம்” என்று பதிவு செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்குமே என்ற ஏக்கம் பிளம்பிட்டு இருந்தது. இந்த 21 நூற்றாண்டின் ஒரு இலக்கிய வெறியனின் வேகம் இன்று தமிழ் உலகம் கண் பிதுங்கி யோசிக்கும் ஆற்றல் மிகபபெற்றுள்ள வைரமுத்து என்ற பாறை சிதறும் தமிழ்த தத்துவ துளிகள் இனி எங்கு காண்போம்?

அவரின் உரையில் இந்த தமிழையும், தமிழ் இனத்தையும் மீட்பேன் என்ற வரிகளில் வேகம் தெரிந்தது.ஆனால் உலகை ஆளும்   அரசியல் விவேகம் இல்லையே ! என்று மனம் அழுதது. தமிழ் நாட்டின் தமிழர் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் இன்னொருஅரசியல் பவளம் வேண்டும் என்ற உண்மையை சொல்லி உள்ள வைரம் இன்னும் தமிழர்க்கு “தமிழர் நாடு”  வேண்டும் எனும் உரிமைக்கு பதப்பட வேண்டும்.  தமிழ் என்ற  மொழி, இனம் உளவியல் அரசியல் உரிமைக்கும் உரம் தர வேண்டும். தமிழர் உலகம் ஆட்டம் கண்டுள்ள போது மொழி மாட்டுமே அரசியல் மாற்றத்தின் வெற்றி இலையேல் கண்ணதாசனும், வாலியும், கம்பனும் பாரதியின் பாரத்தை இறக்கி இருக்கலாம் . கவிஞரின் காவியமும் கதை மட்டும் பேசும். ஏங்கி நிற்கும் எதிர்பார்ப்புகள்…. தொடரும் .

தமிழவன், ம. அ.பொன் ரங்கன் 
தமிழர் குரல் மலேசியா 
உலகத் தமிழர் பாதுகாப்பு நடுவண்.