பொங்கல் கருத்துக்களம்

இன்று பொங்கல் விழாக்கள் மிக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. குறுஞ்செய்திகள், மின்னியல் வாழ்த்துக்கள் என பரபரப்பான விழாவாக அமைகிறது. அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பொங்கலை அவரவர் தொகுதிகளில் வைப்பதும் வழக்கமாகி வருகிறது. ஆனால், இந்த கொண்டாட்டங்கள் பொங்கலின் உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் மக்களுக்கு எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறது என்பது மட்டும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிலர் இது பாரம்பரிய விழா என்கின்றனர்; சிலர் இது சமய பெருநாள் என்கின்றனர்; மற்றொரு குழு இது உழைக்கும் வர்கத்தின் விழா என்கின்றனர். எதுதான் உண்மை?

இந்த கேள்விக்கு பதில் தேட, நம்மை சிந்திக்க வைக்க, எதிர்வரும் சனிக்கிழமை, 30 ஜனவரி 2016-ல், பிரீக்பீல்ட் லிட்டில் இந்தியாவில், கருத்துக்களம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கருத்துக்களத்தின் தலைப்பு:- “பொங்கல் விழா – உழவர்க்காகவா அல்லது வியாபாரத்திற்காகவா?”. இதில் கருத்து பரிமாற்றம் செய்வதற்கு அழைக்கப்பட்ட பேச்சாளர்களாக தோழி காமாட்சி, இவர் காராக் சட்டமன்ற உறுப்பினர் ஆவார், தோழி சரஸ்வதி, இவர் ஒரு வழக்கறிஞர், மேலும் தோழர் சேகர், இவர் மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் கருத்துக் களத்தில் இறங்கவுள்ளனர்.

 ஆக, பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுக்க அழைக்கப்படுகின்றனர், ஜெரிட் (ஒடுக்கப்பட்ட மக்கள் அணி) மற்றும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற அலுவலகம் ஒன்றினைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வின் மேற்கண்ட விபரத்திற்கு தோழி கோகிலா அவர்களை 019-2275982 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

pong