மலேசியத் தமிழர்களை ஏமாற்றும் ” திருவிழா அரசியல்” போதும்!

man_writingபொங்கல் தமிழர்களுக்கு ஒரு கலச்சார விழா. தைப்பூசம் அது ஒருவித கலப்பு  சமய விழா. தீபாவளி வடநாட்டவர் விழா. இப்போது வடநாட்டவர்கள் தீபாவளியிலிருந்து  விலகி நிற்கின்றனர். ஹிந்துத்துவா ஹிந்துக்கள்  எண்ணில் அடங்கா  பெயர் சொல்ல முடியாத அளவுக்கு நாள் காட்டியில் மூன்நூற்று அறுபத்து ஐந்து நாட்களும் ஏதாவது ஒரு வைபவம் இருந்து  கொண்டேதான் இருக்கும். அந்த அளவுக்கு சமய வித்வான்கள் சோதிடத்தை கிரக மண்டல ஆய்வுகளை நிமிர்த்தி நிலை நாட்டிய ஒரே மதம்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியல் வாதிகளின் விழாவாக தமிழர் மற்றும் ஹிந்துத்துவா விழாக்கள் பத்திரிக்கைகளை வண்ண வண்ண அலங்கரிப்பில் கோலமிடுகிறது. ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் விழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் கொடி தூக்கும் அரசியல் வாதிகளை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது.

இவர்களுக்கு இந்தியர்களின் விழாவும், பண்டிகையும் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் ஒரு ஜாடியாகும்.. இதற்கு அல்லது  இவர்களுக்கு ஒட்டி, ஓடி, கொடி பிடித்து பதாதை  ஏந்தும் வட்டார அரசியல் குட்டி   பீமர்கள் ஏதோ ஒருவகை வருவாயில் சமாளிக்கிறார்கள்.

நமது கலாச்சாரத்தோடு  ஒட்டி உறவாடும் இவர்களை பெருமையாக பார்ப்பதா அல்லது அரசியல் சந்தர்ப்ப சகுனிகளாக பார்ப்பதா ? நம் மலேசியாவில் விழாக்கள் ஓர்  அழகு என்றாலும் நம் அரசியல் விதியை நினைத்தால் கதி கலங்குகிறது. ஒரு மாண்புமிகுவிடம் ஒரு இரண்டாயிரம் வெள்ளி வாங்கி விட்டு அரசியல் சீடர்கள் படும் பாட்டை வேதனையோடு பார்க்கிறோம்.

அவருக்கு ஒரு மேடை ,மாலை. அவருடன் வரும் இன்னும் அரசியல் புத்துயிர் தோழர்களுக்கு மாலைகள். ஒளி/ ஒலி பெருக்கிகள் வீட்டிலுள்ள பாமர பெண்களுக்கு தெருவில் பொங்கு சோறு பொங்கல் போட்டி. “இங்கே பாமர மக்கள் என்பதை கவனிக்கவும்” அரசியல் வாதிகள் முதலீடு என்பது இதற்கு   நான் கூறும் தத்துவம். அடிமட்ட மக்களின் உரிமைக்கும் உணர்வுகளுக்கும் உதவாத அரசியல் பேடிகள் அன்று மட்டும் வாடகை வசப்பு வாக்கியங்களை பரிசாக உதிர்ந்து விட்டு அத்தோடு கதவை பூட்டி  ” வைபி தடா” என்ற கதவு பட்டை பல்லிலிக்கும் சோகத்தை பார்க்க கொடுத்து வைதுருப்போம்.

அரசு மானியம தருகிறது. விழாவுக்கு பாதி. மிஞ்சியது மோப்பம்   என்ற வேட்டைக்காக விழாக்கள் கோலமிட கலை இரவுகள் ஓலமிட
அரைமணி நேரத்தில் வைபீ பறந்து விடுவார். நம்ம ஊர் தலைவர் ஓடி ஆடி அலங்கோலமா விநியோக வாடிக்கைகாரகளுக்கு கடன் சொல்லிக்கொண்டு வியர்த்து மிரலுவார்.

இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்த சமூகத  தலைவர்கள் அடுத்த பொங்கலுக்குள் பொங்குஸ். அந்த வைபீ வேறொரு புதிய ஆசாமியிடம் அடுத்த தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவார். ஏழைகளுக்கு சாதாரண சமுக நல நிதிகளை கூட பெற முடியாத இவர்கள் சட்ட சபையையும் நாடாளுமன்றத்தையும்  மாற்ற முயல்வது ஆமை மேல் ஏறி  முயல் சவாரி செய்யும் யுக்தியாக உள்ளது. இதையும் வேடிக்கை பார்க்கும் கூட்டமாக இந்தியர்களும், இந்துத்துவாகக்களும், தமிழர்களும் அரோகரா போடுவது எதற்கு?

இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கு பிரதமரும் வரவில்லை ! சிலாங்கூர் மாநில முதல்வரும் வரவில்லை ! காரணம் பாதுகாப்பு
காரணம் என்ற பதில் வந்தது. நாட்டின் பாதுக்காப்பு மீது யாருக்கு முதலில் நம்பிக்கை வர வேண்டும்  என்று  என் தாத்தாவிடம் கேட்டேன் .அவர் சிரித்துகொன்டே நீயும் போவாதடா என்றார். நான் அதையும் மீறி தமிழேண்டா என்று சொல்ல நினைத்தேன்.

ஆனால் தைப்பூசம் நிறைவாக நடந்து முடிந்தலில் நமக்கு மகிழ்ச்சிதான். என்றாலும் சிலாங்கூர் மாநில விழா, தைப்பூசம்  ஒரு தேசிய விழா சிலாங்கூர் மாநிலம் பத்துமலை திடலில் கலை நிகழ்ச்சியை நடத்தாமல் வீதி  ஓரம்.  மேல் வீதிக்கு கீழே நடத்துவது
என்ன நியாயம் ?

சிலாங்கூர் மாநில அல்லது தேசிய சுற்றுலாத்துறை ஒரு தேசிய சமய விழாவின்  கலை நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற வரைமுறை இல்லையா ? சிலாங்கூர் மாநில ஏழை பிரிவின் ஆட்சிக்குழு  உறுப்பினர்  மாண்புமிகு கணபதி ராவ் சமய விழாவுக்கு தலைமை தாங்கும்  பச்சத்தில்   மாநில சுற்றுலா ஆட்சிக்குழு எலிசபெத் ஓங்கை உறுப்பினரை உசுப்பிப பார்த்தேன். இவர் சீனர் பெருனாளுக்கும், புத்தர் விழாவுக்கும் பொறுப்பாம். ..நாம் கேற்கும் ஒரு தேசிய இன்னும் சொன்னால் உலக  விழாவுக்கு 2மில்லியன் மக்கள் கூடும்  சமய விழாவுக்கு என்ன அந்தஸ்தை சிலாங்கூர் மாநிலம் அல்லது சுற்றுலா துறை தந்துள்ளது என்ற சின்ன வினாவோடு…. அரசியல் வாதிகள் மக்கள் உரிமை அறிந்து விழாவுக்கு பெருமை சேர்க்க வரணும். இங்கே அரசியல் தெருவிளையாடல் வேண்டாம். மரியாதையாக அடுத்த ஆண்டு தைப்பூச கலை இரவை பத்துமலை உள்ளே உள்ள திடல் மைதானத்தில் மாநில சுற்றுலா துறை நடத்த வேண்டும் . இல்லையேல் ஆட்சிக்குழுவில் இருந்து விலகவும். இதே கோரிக்கையை நடுவண் சுற்றுலா அமைச்சுக்கும் பணிக்கிறோம். இரண்டு அரசுகள் அரசியல் விளையாட்டில் நம்  சமயத்தை உரசி பார்க்க வேண்டாம். நாங்கள் வேடிக்கையும் பார்ப்பபோம் வேட்டும் வைப்போம்.

பொன் ரங்கன் 
தமிழர் குரல் சிலாங்கூர்