லெவி கட்டணத்தை உயர்த்துமுன்னர் கலந்து ஆலோசிக்காதது ஏன்?, மஇகா இளைஞர்கள் கேள்வி

youth micஅரசாங்கம்  வெளிநாட்டுத்  தொழிலாளர்களுக்கு  லெவி  கட்டணத்தை  உயர்த்தியதால்  வணிகர்கள்  கடுமையாக  பாதிக்கப்பட்டிருப்பதாக  மஇகா  இளைஞர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

“வெளிநாட்டுத்  தொழிலாளர்களுக்கான  லெவி  கட்டணத்தை  உயர்த்துமுன்னர்  சம்பந்தப்பட்டவர்களுடன்  கலந்து  ஆலோசித்திருக்க  வேண்டும்.

“அப்படிச்  செய்திருந்தால்  வணிகர்கள்,  குறிப்பாக  சிறு  வணிகர்கள்  தொழில்  நடத்த  சிரமப்படுவதும்  லெவி  கட்டணம் இரட்டிப்பாக்கப்படுவதை  அவர்கள்  தாங்க  மாட்டார்கள்  என்பதும்  அதற்குத்  தெரிய  வந்திருக்கும்”, என  மஇகா  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜா  ஒர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

வணிகர்கள்  செலவின  உயர்வையும்  விற்பனைக்  குறைவையும்  சமாளிக்கப்  போராடிக்  கொண்டிருக்கிரார்கள்  என்று  குறிப்பிட்ட  அவர்,  ரிம1,500-இலிருந்து  ரிம2,500  ஆக  உயர்த்தப்பட்டிருக்கும்  லெவி  கட்டணத்தை  “அவசரமாக  மறுபரிசீலனை  செய்ய  வேண்டும்”  என்றும்  கேட்டுக்கொண்டார்.