எஸ்ஆர்சி நிதி மாற்றிவிட்டது பற்றிக் கருத்துரைக்க நிதி அமைச்சர் II மறுப்பு

hanadஇரண்டாவது  நிதி  அமைச்சர்  அஹ்மட்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்குக்குப்  பணம்  மாற்றிவிடப்பட்டது  பற்றிக்  கருத்துரைக்க  மறுத்து  விட்டார்.

“அதன்மீது விசாரணை  நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது.  அதனால்  கருத்துரைக்க  இயலாது”, என்று  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  அவர்  தெரிவித்தார்.

போலீசாரும்  எஸ்ஆர்சி-இலிருந்து  பணம்  மாற்றிவிடப்பட்டதன்மீது  விசாரணையைத்  தொடர்வதற்குமுன்   தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கைக்காகக்  காத்திருக்கிறார்கள்.

ஆனால்,  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி,  ரிம2.6 பில்லியன்  விவகாரத்திலும்  எஸ்ஆர்சி   பணம்  ரிம42 மில்லியன்  நஜிப்பின்  வங்கிக்  கணக்குக்கு   மாற்றிவிடப்பட்ட  விவகாரத்திலும்  நஜிப்  குற்றமற்றவர்  என்று  அறிவித்துள்ளார்.

எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  தம்முடைய  வங்கிக்  கணக்குக்குப்  பணம்  மாற்றிவிடப்பட்டது   பற்றி  “பிரதமருக்குத்  தெரியாது”  என்றும்  அபாண்டி  கூறினார்.