நஜிப்பின் ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடையாக இருக்க முடியாது என்கிறார் சவூதி அமைச்சர்

saudi miசவூதி  வெளியுறவு  அமைச்சர்  அடெல்  அல்-ஜூபிர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  இருந்த  ரிம2.6பில்லியன்  ஓர்  அரசியல்  நன்கொடையாக   இருக்க  முடியாது  என்றும்  அது  சவூதி  அரசாங்கத்திடமிருந்து  வந்திருக்க  வழியில்லை   என்றும்  நினைக்கிறார்.

அது “முதலீடு”  செய்வதற்கு  அனுப்பப்பட்ட  பணமாக  இருக்கலாம்  என்று  அவர்  குறிப்பிட்டார்.

“சவூதி  குடிமகன்  ஒருவர்  அதை  அனுப்பியிருக்கலாம்  மலேசியாவில்  முதலீடு  செய்வதற்காக”, என  அல்-ஜூபிர்  தெரிவித்ததாக  நியு  யோர்க்  டைம்ஸ்   கூறியது.

அதே  வேளையில், அப்பணம்  மாற்றிவிடப்பட்டதில்  குற்றம்  எதுவும்  நிகழ்திருக்கவில்லை  என்று  மலேசிய  சட்டத்துறைத்   தலைவர்  அறிவித்திருப்பதையும்  தாம்  ஒப்புக்கொள்வதாகவும்  அவர்  தெரிவித்தார்.

மேலும்,  இரண்டு  வட்டாரங்கள்  அப்பணம்  ஒரு  நன்கொடை  அல்ல  என்று  தெரிவித்ததாகவும்  அச்செய்தி  கூறிற்று.

அது  “தொழிலுக்காக  போடப்பட்டது”  என்று  அவை  கூறிக்கொண்டன.