சீனர்களின் ஆதரவு பிஎன்னுக்குத் திரும்ப வேண்டும்: ஜாஹிட்டின் சீனப் புத்தாண்டு விருப்பம்

cny-jதுணைப்   பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடியிடம்  சீனப்  புத்தாண்டில்  அவரது  விருப்பம்  பற்றி  வினவப்பட்டது.

பல  விருப்பங்கள்  இருப்பதாகக்  குறிப்பிட்ட  துணைப்  பிரதமர்,  சீனர்களின்  ஆதரவு  மீண்டும்  பிஎன்  பக்கம்  திரும்ப  வேண்டும்  என்பதும்  அவற்றில்  ஒன்று  என்றார்.

“குரங்கு  ஆண்டு  வளப்பம்மிக்க   ஆண்டாக  விளங்க  வேண்டும்.

“அதனால்  அரசியல்,  பொருளாதார  பிரச்னைகள்  தீரும். சீனர்  சமூகமும்  அரசாங்கத்துக்கு  ஆதரவாக  திரும்ப  வேண்டும்”.ஜாஹிட்,  இன்று  கோலாலும்பூரில்  மசீச-வின்  திறந்த  இல்ல  உபசரிப்பில்  கலந்துகொண்டார்.