தைவான் நிலநடுக்கம்: இரண்டு நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து ஒரு பெண் உயிருடன் மீட்பு

uakeதைவானின்  தைனான்  நகரில், நில  நடுக்கத்தில்  இடிந்து  விழுந்த  ஒரு  கட்டிடத்தின்  இடிபாடுகளிலிருந்து  பெண்  ஒருவர்  இன்று  உயிருடன்  மீட்கப்பட்டார்.48 மணி  நேரத்துக்குமேல்  அவர்  இடிபாடுகளில்  சிக்கிக்  கொண்டிருந்தார். ஓர்  ஆடவரும்  இடிபாடுகளில்  சிக்கிக்  கொண்டிருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.

தைவானை  உலுக்கிய  நிலநடுக்கத்தில்  பலியானவர்  எண்ணிக்கை  35 ஆக உயர்ந்துள்ளது. 100 பேரை  இன்னும்  காணவில்லை.

சனிக்கிழமை  அதிகாலை  மணி 4-க்கு  நிலநடுக்கம்  தாக்கியது.

உயிருடன்  மீட்கப்பட்ட  ட்சா  வெய் லிங் அவரின்  கணவரின்  சடலத்தின்  அடியில்  சிக்கிக்  கொண்டிருந்தார். அருகில்  அவரின்  2-வயது  குழந்தை. அது  பிழைக்கவில்லை.

இடிபாடுகளில்  சிக்கிக்கொண்டிருக்கும்  லி  ட்சுங்-டியான்  என்னும் ஆடவர்  உணர்வுடன்  இருப்பதாகவும்  மீட்புப்  பணியாளர்களுடன்  உரையாடிக்  கொண்டிருப்பதாகவும்  அப்பகுதி  சட்டப்  பிரதிநிதி  வாங்-டிங்  இயு   தெரிவித்தார்.

இடிபாடுகளில்  மேலும்  பலர்  சிக்கி  இருக்கலாம்  என்ற  நம்பிக்கையில்  மீட்புப்  படையினர்  தொடர்ந்து  தேடிக்  கொண்டிருக்கிறார்கள்.

“தேடுவதை  நிறுத்தப்போவதில்லை”, என  அந்நகர  மேயர்  வில்லியம்  லாய்  கூறினார்.