தமிழகத்தில் இருசக்கர அவசர உதவி சேவை தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, பெண்கள் இருசக்கர வாகங்களில் சென்று மருத்துவ முதலதவி வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவ முதலுதவி திட்டத்தில் இணைந்துள்ள பெண் ஒருவர்

‘108’ அவசர ஆம்புலன்ஸ் திட்டத்துடன் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் மூலமாக, உடனடி மருத்துவ வசதி தேவைப்படுவோருக்கு, தாமதமில்லாமல் அதை வழங்க முடியும் அதில் ஈடுபட்டுள்ளனர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் அவசர முதலுதவிக்கான 41 இருசக்கர வாகங்களின் இந்த சேவையை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

பெண்களுக்கென பிரத்யேக இருசக்கர வாகனங்களும் இந்த திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

இது தங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்றும், இந்த சவாலை ஏற்று செயல்படுவோம் என்றும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் இந்தத் திட்டம் பகுதி நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும், குறிப்பாக நகரங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கால கட்டங்களிலும், பண்டிகை காலங்களிலும் தான் இந்த சேவை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. -BBC

TAGS: