சீனச் சக்கரவர்த்திபோல் உடை அணிந்து வம்பில் சிக்கிக்கொண்ட பாஸ் பிரதிநிதி

costumeபாஸ்  கட்சியின் பாயா  ஜராஸ்  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்  முகம்மட்  கைருடின்  ஒத்மான் “சீனச் சக்கரவர்த்தி”போல்  உடை  தரித்து  சீனப்  புத்தாண்டுக்  கொண்டாட்டத்தில்  கலந்துகொண்டது  வம்பாக  போய்விட்டது.

அவர்  அணிந்த  உடை  தாவோ  சமயத்தாரின்   எட்டு  தெய்வங்களில்   ஒன்றான  காவ்  குவோஜியு-வுக்குரிய  உடையாம்.

அந்த  உடைக்குச்  சமயத்  தொடர்பு   இருக்கும் என்பதை  கைருடின்  அறிந்திருக்கவில்லை.

“சீனப்  புத்தாண்டை  ஒரு  கலாச்சாரக்  கொண்டாட்டம்  என்றும்  அதற்குச்  சமயத் தொடர்பு  இல்லை  என்றும்தான்   நினைத்துக்  கொண்டிருந்தேன்”, என  கைருடின்  தெரிவித்ததாக  பாஸ்  கட்சிப்  பத்திரிகையான  ஹராகா  டெய்லி  கூறிற்று.

கெப்போங்கில்  சீனப்  புத்தாண்டில்  கலந்துகொள்ள  தம்மை  அழைத்தவர்கள்  அந்த  உடை  சீனச்  சக்கரவர்த்திக்குரிய  உடை  என்றுதான்  தம்மிடம்  தெரிவித்தார்கள்  என்றாரவர்.

அந்த  உடையை  அணியுமாறு  அவர்கள்  கேட்டுக்கொண்டதால்  மரியாதைக்காக  அதை  அதை  அணிந்து  கொண்டதாக  கைருடின்  கூறினார்.

“தலைமைத்துவம்  என்ன  முடிவெடுத்தாலும்  அதை  ஏற்பேன்.

“நான்  இஸ்லாமிய  போதனைகளை  மீறி  இருந்தால்  அல்லாவிடமும்  பாஸ்  உறுப்பினர்களிடமும்- குறிப்பாக  சிலாங்கூரில்  உள்ளவர்களிடம்,  மன்னிப்பு  கோருகிறேன்”, என  சிலாங்கூர்  பாஸ்  செயலாளருமான  கைருடின்  கூறினார்.