சாலமன் தீவுகளில் வலுவான நிலநடுக்கம்

quakeரிக்டர்  கருவியில்  6.4  என்று  பதிவான  நிலநடுக்கம்  நேற்றிரவு  மணி  12.19க்கு  சாலமன்  தீவுகளைத்  தாக்கியதாக  மலேசிய  வானியல்  துறை  அறிவித்தது.

சாபாவின்  செம்பூர்ணாவிலிருந்து  4.193 கிலோ  மீட்டர்  தொலைவில்  நிலநடுக்கம்  மையம்  கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால்  சுனாமி  ஏற்படும்  அபாயம்  இல்லை.

இதனிடையே,  இன்று  நியு  சிலாந்தின்  தலைநகரமான  வெலிங்டனும்  5.7 சக்தி  வாய்ந்த  நிலநடுக்கத்தால்  குலுக்கப்பட்டது  என  ராய்ட்டர்ஸ்  அறிவித்துள்ளது.

450,000 மக்களைக்  கொண்ட  அந்நகரில் பலரும்  நிலநடுக்கத்தின்  அதிர்வை  உணர்ந்தார்கள். ஆனால், யாரும்  காயம்  அடைந்ததாகவோ  சேதங்கள்  ஏற்பட்டதாகவோ  தகவல்  இல்லை.