மகனைப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கும் மகளைப் பராமரிக்கும் உரிமை தாயாருக்கும் கொடுக்கப்பட்டது

fedஇஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள்  சம்பந்தப்பட்ட வழக்கில்  அக்குழந்தைகளைச்  சந்தித்துப்  பேசிய  கூட்டரசு நீதிமன்றம்,  மகனைப் பராமரிக்கும்  உரிமையை  அவர்களின்  தந்தையான  இஸ்வான்  அப்துல்லா(என், வீரன்)வுக்கும்  மகளைப்  பராமரிக்கும்  உரிமையைத்  தாயார்  எஸ்.தீபாவுக்கும்  கொடுத்துத்  தீர்ப்பளித்தது.

பிள்ளைகளின்  விருப்பத்தின்  அடிப்படையில்  அத்தீர்ப்பு  அளிக்கப்பட்டது.

சிவில்  திருமண வழக்குகளில்  திருமணத்தை ரத்து செய்வது குறித்த முடிவை எடுப்பதற்கு சரியான இடம் சிவில் நீதிமன்றம்தான் என்றும்  உச்ச  நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

கணவன் -மனைவியரில்  ஒருவர்  இஸ்லாத்துக்கு  மதம் மாறியதை அடுத்து  அவர்களின்  திருமணம் ஒன்றை, செல்லாது என அறிவிக்கவோ , பராமரிப்பு உத்தரவைப் பிறப்பிக்கவோ ஷரியா நீதிமன்றத்திற்கு  அதிகாரம் இல்லை என்று ஐவர்  அடங்கிய  நீதிபதிகள்  குழு  அதன்  தீர்ப்பில் குறிப்பிட்டது.