‘ஒன்றுபடுவீர்’- எதிரணியினருக்கும் அம்னோ கிளர்ச்சிக்காரர்களுக்கும் சைட் அறைகூவல்

saveமுன்னாள்  அமைச்சர்  சைட்  இப்ராகிம்  எதிரணியினரும்  அம்னோவில்  உள்ள  கிளர்ச்ச்சிக்காரர்களும்  பொது  எதிரிகளான  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மற்றும்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அப்பாண்டி  அலி  ஆகியோருக்கு  எதிராக  ஒன்றுபட  வேண்டும்  என  வலியுறுத்துகிறார்.

“நஜிப்புக்கும்  அபாண்டிக்கும்  எதிராக  அதிகமாக  எதையும் செய்ய  முடியாது,  அடுத்த  பொதுத்  தேர்தலில்  வெற்றிபெறுவதைத்  தவிர.

“அடுத்த  தேர்தலுக்காகக்  காத்திருக்கும்வரை  எதிரணியினரும்  அம்னோ  கிளர்ச்சிக்காரர்களும்  ஒன்றுபட்டு  நஜிப்பையும்  அபாண்டியையும்  எதிர்ப்பது  பற்றி  ஏன்  திட்டமிடக்கூடாது?

“நஜிப்  அகற்றப்பட  வேண்டிய  ஒரு  புற்றுநோய்  என்ற  கருத்தைக்  கொண்டுள்ள  தேசிய  தலைவர்கள்  ஒன்று  சேர்ந்து  ஒரு  அகண்ட  கூட்டணியை  அமைக்க  வேண்டும். அதுதான்  இப்போதைய  தேவை”, என்று  சைட் அவரது  வலைப்பதிவில்   பதிவிட்டிருந்தார்.

நாட்டைப்  பாதுகாக்கும்  தேசிய  ஒற்றுமை  மன்றம்  அமைக்க தலைவர்களின்  உச்சநிலைக்  கூட்டமொன்று  கூட்டப்பட  வேண்டும்  என்றாரவர்.