கூ நான்: ‘மலத்தைக் கிளறும்’ நாற்றக் கும்பல் அம்னோவுக்குள் இருந்துகொண்டே அதை எதிர்க்கிறது

nan kuஅம்னோ தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  Gabungan Ketua Cawangan Malaysia (ஜிகேசிஎம்)-வை  “மலத்தைக் கிளறும்  நாற்றக்  கும்பல்  என்று  வருணித்துள்ளார்.

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்க்கு  எதிராக  தீர்மானம்  கொண்டுவரும்  அவர்களின்  திட்டம்  வெற்றிபெறும்  என்று  அவர்  நினைக்கவில்லை.

“இவர்கள்  மலத்தைக்  கிளறிக்  கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள்  கட்சி  விதிமுறைகளை  மதிக்க  வேண்டும்.

“அவர்கள்  என்ன  செய்ய  நினைக்கிறார்களோ  அது  நிறைவேறும்  என்று  நினைக்கவில்லை”, என  தெங்கு  அட்னான்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

ஒரு  தீர்மானத்தைக்  கொண்டு  வருவது  எளிதல்ல.  அதற்கு  அவர்களின்  கிளைகளில்  மூன்றில்  இரண்டு  பங்கு  உறுப்பினர்களின்  ஆதரவைப்  பெறுவது  உள்பட  பல  நடைமுறைகள்  உண்டு  என்றாரவர்.